உள்ளூர் செய்திகள்

நகராட்சி கூட்டம் நடந்த போது எடுத்த படம்

தென்காசி நகராட்சி கூட்டம்

Published On 2023-01-25 09:06 GMT   |   Update On 2023-01-25 09:06 GMT
  • தென்காசி நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது.
  • கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் சரிவர குப்பைகள் சேகரிக்க ஆள் வரவில்லை என கூறினார்கள்.

தென்காசி:

தென்காசி நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சுப்பையா, ஆணையாளர் பாரி ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 7 தீர்மானங்கள் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மேலும் நகராட்சியில் செயல்படுத்தப்பட இருக்கும் அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மை பணிகள் குறித்தும் விவாதம் செய்யப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் சரிவர குப்பைகள் சேகரிக்க ஆள் வரவில்லை என கூறினார்கள். இதற்கு பதில் அளித்த நகர் மன்ற தலைவர் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் பிரித்துக் கொடுக்காத சூழ்நிலையில் அவற்றை தூய்மை பணியாளர்களே பிரித்து குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்வதால் நேர விரையம் ஏற்படுகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை திறம்பட செய்ய முடியும் எனவே அனைத்து கவுன்சிலர்களும் தங்களது பகுதி பொதுமக்களிடம் குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க ஆலோசனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் காதர் மைதீன், ஆசிக் முபினா ,சையது சுலைமான் ரபிக், வசந்தி வெங்கடேஸ்வரன், சுப்பிரமணியன், சங்கர சுப்பிரமணியன், ராசப்பா, நாகூர் மீரான் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News