உள்ளூர் செய்திகள்
ஆசிரியை குத்திக்கொலை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம்
- ஆசிரியர் ரமணியின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
- கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை:
ஆசிரியை ரமணி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணியின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசிரியர் ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.