உள்ளூர் செய்திகள்
மணலியில் உரிமம் இல்லாமல் செயல்படும் ரசாயன தொழிற்சாலைகளுக்கு 'சீல்'- மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம்
- அம்மா உணவகத்தில் சப்பாத்தி மாவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
திருவொற்றியூர்:
மணலி மண்டல குழு கூட்டம் தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. உதவி கமிஷனர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் மணலியில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் 100-க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சா லைகளுக்கு சீல் வைக்க வேண்டும்,அம்மா உணவகங்களில் சப்பாத்தி இல்லை. எனவே, அம்மா உணவகத்தில் சப்பாத்தி மாவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதைத்தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, மணலி பகுதியில் உரிமம் இல்லாமல் இயங்கி வரும் ரசாயன தொழிற்சாலைகள் மீது சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உட்பட 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.