உள்ளூர் செய்திகள்
திருக்கழுக்குன்றம் அருகே தொழிலாளி தற்கொலை
- ரவி மது குடிப்பதை குடும்பத்தினர் கண்டித்து வந்தனர்.
- மனவேதனை அடைந்த ரவி வீட்டின் அருகே திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த ஆதிகேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது47). கூலித்தொழிலாளி. இவர் மது குடிப்பதை குடும்பத்தினர் கண்டித்து வந்தனர். இதனால் மன வேதனை அடைந்த ரவி வீட்டின் அருகே திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.