உள்ளூர் செய்திகள்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி- உடலில் பெட்ரோல் ஊற்றியதால் பரபரப்பு

Published On 2022-10-31 09:48 GMT   |   Update On 2022-10-31 09:48 GMT
  • நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ராமு (வயது 54). இவர் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே சென்றபோது திடீரென தனது கைப்பையில் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நீஜா, பாளை நுண்ணறிவு பிரிவு ஏட்டு தினகரன், எஸ்.பி. தனிப்பிரிவு தலைமை காவலர் அருணாச்சலம் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு அவரது உடலில் தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர்.

அப்போது அவரது கையில் ஒரு மனு இருந்தது. அதில் கூறியிருப்பதாவது:-

எனது கணவருடன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் மேலப்பாளையத்தில் வசித்து வருகிறேன். அதே பகுதியை சேர்ந்த ஒருவர் எனது வீட்டை காலி செய்யுமாறு எங்களை வற்புறுத்தி மிரட்டி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகன்களுடன் வந்து எனது வீட்டை காலி செய்யுமாறு கூறினார். நான் மறுக்கவே அவர் என்னை தாக்கிவிட்டு சென்றார். காயம் அடைந்த நான் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளார். இது தொடர்பாக ராமுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News