உள்ளூர் செய்திகள்

மாத்தூர் ஊராட்சியில் நீர்நிலை பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகள்

Published On 2023-02-13 17:32 IST   |   Update On 2023-02-13 17:32:00 IST
  • தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர்.
  • பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரகடம்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் ஊராட்சியில் நீர்நிலைகள் உள்ள பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நீர்நிலை பகுதிகள் மாசடைந்து வருகிறது.

கொட்டப்படும் குப்பைகளை கால்நடைகள் தின்று பாதிப்படைந்து வருகிறது. எனவே நீர்நிலை பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற ஊரக வளர்ச்சி துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய வட்டார வளர்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News