உள்ளூர் செய்திகள்
வண்ணாரப்பேட்டை பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை-வாலிபர் கைது
- பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- வண்ணாரப்பேட்டை போலீசார் ரகளையில் ஈடுபட்ட விஜயகுமாரை கைது செய்தனர்.
ராயபுரம்:
பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் தேசியப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தண்டையார்பேட்டைபகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கட்சி நிர்வாகி மீது புகார் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவரை அங்கிருந்த நிர்வாகிகள் தடுத்தனர். அவர்களிடம் விஜயகுமார் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீசார் ரகளையில் ஈடுபட்ட விஜயகுமாரை கைது செய்தனர்.