உள்ளூர் செய்திகள்
- மணிகண்டன் தலையில் பலத்த காயம் அடைந்து பலியானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் வியாசர்பாடியை சேர்ந்த உதயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புழல் அடுத்த சூரப்பட்டு பிருந்தாவன் நகர், மல்லிகை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவர் மோட்டா்ர சைக்கிளில் மாதவரம், செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த மினி வேன் திடீரென மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் தலையில் பலத்த காயம் அடைந்து பலியானார். இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் வியாசர்பாடியை சேர்ந்த உதயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சபரிமலைக்கு சென்று இருந்த மணிகண்டன் நேற்று தான் திரும்பி வந்து இருந்தார். இந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்.