வளசரவாக்கத்தில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி
- சவுமியாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளசரவாக்கம். எஸ்.வி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் சவுமியா (வயது17). பிளஸ்-2 முடித்து உள்ள இவர் கல்லூரியில் சேர இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 10மணி அளவில் சவுமியா, காற்று வாங்குவதற்காக வீட்டின் 2-வது மாடிக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த பக்கவாட்டு கைப்பிடி சுவர் மீது ஏறி அமர்ந்து இருந்ததாக தெரிகிறது.
அப்போது நிலை தடுமாறிய சவுமியா எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். அவர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிள்கள் மீது விழுந்ததில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சவுமியாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.