உள்ளூர் செய்திகள்
ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் ரூ.80 லட்சத்தில் ரோபோ ஆய்வுக்கூடம்
- அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 1300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
- ஒரு அங்கமாக ரோபோக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.80 லட்சம் செலவில் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 1300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்த பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் முயற்சி எடுத்தனர்.
அதில் ஒரு அங்கமாக ரோபோக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.80 லட்சம் செலவில் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. பழைய மாணவர் சுதீர் ஆய்வு மையத்தை திறந்து வைத்தார். தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி சேதுராமன், தலைமை ஆசிரியர்கள் சுலோச்சனா, லோகநாதன் கலந்து கொண்டனர். ஆசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.