உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி
- முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.
- மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கணபதிசுந்தரம். இவரது மகன் பானுபிரகாஷ் (38). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மணவாளநகர் சந்திப்பு பகுதியில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.
இந்த விபத்தில் லாரியில் சிக்கிய பானுபிரகாஷ் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.