உள்ளூர் செய்திகள்
கூடுதல் விலைக்கு மது விற்ற பெண்கள் உள்பட 25 பேர் மீது வழக்கு
- கூடுதல் விலைக்கு மதுவிற்ற 4 பெண்கள் உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- 534 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற 4 பெண்கள் உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 534 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.