உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே ரூ.1.68 லட்சம் மதிப்பிலான தேங்காய் எண்ணெய் திருட்டு

Published On 2023-04-16 14:34 IST   |   Update On 2023-04-16 14:34:00 IST
  • மாடூர் டோல்கேட் அருகே உள்ள பேக்கரியில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாகுறிச்சி ரெயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 49). டிரைவர். இவர் கடந்த 13-ந்தேதி புதுவையில் இருந்து சுமார் 450 பெட்டி தேங்காய் எண்ணெயை லாரியில் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சம்பவத்தன்று மாடூர் டோல்கேட் அருகே உள்ள பேக்கரியில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது லாரியில் இருந்த தார்ப்பாய் கிழிக்கப்பட்டு 24 பெட்டி தேங்காய் எண்ணெய் திருட்டு போனது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ.ஒரு லட்சத்து 68 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News