தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- கோடைவெயில் சுட்டெரித்து வந்ததால் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வெப்பம் நிலவியது.
- முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 117.35 அடியாக உள்ளது.
கூடலூர்:
கோடைவெயில் சுட்டெரித்து வந்ததால் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வெப்பம் நிலவியது. வறட்சி காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டு மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. மேலும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டன.
இந்தநிலையில் தற்போது பெய்துவரும் திடீர் மழையால் ஓரளவு குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 117.35 அடியாக உள்ளது. 160 கனஅடிநீர் வருகிறது. 256 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 53.84 அடியாக உள்ளது. 267 கனஅடிநீர் வருகிறது. 70 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.45 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 32.80 அடியாக உள்ளது. 7 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 3, தேக்கடி 4.4, சண்முகாநதி அணை 1.2, உத்தமபாளையம் 2, வைகை அணை 18.4, சோத்துப்பாறை 28, மஞ்சளாறு 63, பெரியகுளம் 51, வீரபாண்டி 1.4, அரண்மனைப்புதூர் 2, ஆண்டிபட்டி 6.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.