உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் ஆபாச படத்துடன் செல்போன் எண்ணை சமூக வலைதளத்தில் பரப்பிய வாலிபர் கைது

Published On 2023-06-29 12:15 IST   |   Update On 2023-06-29 12:15:00 IST
  • நித்தியானந்தம் செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
  • ஆபாச படத்துடன் செல்போன் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டது கீழவலம் கிராமத்தை சேர்ந்த கஜபதி என்பது தெரிந்தது.

செங்கல்பட்டு:

மதுராந்தகம் அருகே உள்ள கீழவலம் கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவரது செல்போன் எண்ணுடன் ஆபாச படத்தை சேர்த்து சமூக வலைதளத்தில் மர்ம நபர் பதிவு செய்து இருந்தார். இதனை பார்த்து நித்யானந்தம் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நித்தியானந்தம் செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

ஆபாச படத்துடன் செல்போன் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டது கீழவலம் கிராமத்தை சேர்ந்த கஜபதி என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொதுமக்கள் மற்றும் பெண்கள் தன்னுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலதளங்களில் பதிவிட வேண்டாம்" என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News