உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்துக்கு விஷம் குடித்த நிலையில் வந்த கோபாலகிருஷ்ணனை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற காட்சி.

கலெக்டர் ஆபீசில் விஷம் குடித்தார்: தொழிலாளி புகாரை விசாரிக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2022-06-28 05:35 GMT   |   Update On 2022-06-28 05:35 GMT
  • சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சண்முகம் என்பவர், மில் தொழிலாளி கோபாலகிருஷ்ணனின் மனுவை முறையாக பெற்று விசாரிக்கவில்லை என தெரியவந்தது.
  • இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.

கோவை:

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை கொடுத்தனர். இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

அப்போது வாலிபர் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி சோர்வுடன் நடந்து வந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவரது பெயர் கோபாலகிருஷ்ணன் (வயது 35), கோவை இருகூர் ஏ.ஜிபுதூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மில் தொழிலாளியான கோபாலகிருஷ்ணனுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோபாலகிருஷ்ணன், சிங்காநல்லூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகார் மனு மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனம் உடைந்த கோபாலகிருஷ்ணன் விஷம் குடித்து விட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.

அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.

சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சண்முகம் என்பவர், மில் தொழிலாளி கோபாலகிருஷ்ணனின் மனுவை முறையாக பெற்று விசாரிக்கவில்லை என தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News