உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும்- ஊழியர்கள் மாநாட்டில் தீர்மானம்

Published On 2022-10-11 14:09 IST   |   Update On 2022-10-11 14:10:00 IST
  • 8-வது மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
  • கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

காஞ்சிபுரம்:

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் 8-வது மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார். 2-வது நாளாக நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழகத்தில் 1200 கிளைகளுடன் செயல்பட்டு வரும் மாநில, மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி என உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும் .மத்திய அரசின் கொள்கை வழிகாட்டுதல்படி இந்த வங்கிகளை சிறு நிதி நிறுவனங்களாக மாற்றினால் அனைத்து வங்கிகளும் லாபம் ஈட்டும் வங்கிகளாக மாறும். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில பொதுச் செயலாளர் சர்வேசன், பொருளாளர் ஹரி கிருஷ்ணன், மாவட்ட கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ரமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News