கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரியும் தனிப்பிரிவு போலீசார்கள் கூண்டோடு இடமாற்றம்
- போராட்டம் கலவரமாக மாறியதால் போலீசார் பொதுமக்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- 30 காவல் நிலையங்களில் பணிபுரியும் மாவட்ட தனிப்பிரிவு போலீசாரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் கடந்த 2-ந் தேதி எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்க தாமதம் ஆனதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் கலவரமாக மாறியதால் போலீசார் பொதுமக்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓசூர் கலவரம் போலீசார் தோல்விக்கு எடுத்துக்காட்டு என விமர்சித்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை, மஹாராஜகடை, காவேரிப்பட்டினம் என மொத்தம் 30 காவல் நிலையங்களில் பணிபுரியும் மாவட்ட தனிப்பிரிவு போலீசாரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.