உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் இன்று காலை சட்டமன்ற பொதுகணக்கு குழுவினர் ஆய்வு செய்த காட்சி.


செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு இன்று கன்னியாகுமரியில் ஆய்வு

Published On 2022-06-28 09:18 GMT   |   Update On 2022-06-28 09:18 GMT
  • குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
  • கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிட்டனர்.

கன்னியாகுமரி:

தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு அதன் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வுமான செல்வபெருந்தகை தலைமையில் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தது. இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் காந்திராஜன், கார்த்திகேயன், சிந்தனை செல்வன், வேல்முருகன் மற்றும் சட்டமன்ற பேரவை சார்பு செயலாளர் பால சீனிவாசன், சிறப்பு அதிகாரி ராஜா, சட்டமன்ற பேரவை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவினரை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வரவேற்றார்.

இந்த குழுவினர் இன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டனர். அதன் பிறகு அங்கு இருந்து மணவாளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்றனர். அதைத் தொடர்ந்து மணவாளக்குறிச்சியில் உள்ள ஐ.ஆர்.இ. நிறுவனத்துக்கு சொந்தமான அபூர்வ மணல் ஆலையை பார்வையிட்டனர்.

தொடர்ந்து குளச்சல் மீன்பிடி துறைமுகம் நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவற்றையும் பார்வையிடுகின்றனர். மாலை 3 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் கலெக்டர் மற்றும் உயர்அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்கள். பின்னர் மாலை 5 மணிக்கு நெல்லை புறப்பட்டு செல்கின்றனர்.

Tags:    

Similar News