உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட அருண், எழிலரசன், மோகன், முத்துலிங்கம் ஆகிய 4 பேரை படத்தில் காணலாம்.


சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய 4 பேர் கைது

Published On 2022-09-08 09:33 GMT   |   Update On 2022-09-08 09:33 GMT
  • கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
  • கலவரத்தின்போது பதிவான வீடியோ காட்சியினை வைத்து அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி வழக்கினை புலனாய்வு செய்யும் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்டு பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்திய சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வலையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த அருண் (வயது 24), அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசன் (20) மற்றும் கலவரத்தின் போது போலீசார் மீது கற்களை வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த மோகன் (30), சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் வயது (37) ஆகிய 4 பேரையும் சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சியினை வைத்து அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News