உள்ளூர் செய்திகள்

மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பிற்காக போராடிய மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும்- சரத்குமார் வலியுறுத்தல்

Published On 2022-07-22 09:06 GMT   |   Update On 2022-07-22 09:06 GMT
  • காவல்துறையினர் போராட்ட சமயத்தில் சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இச்சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.
  • தமிழக அரசு மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் கைது செய்த மாணவர்கள், இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் பாதிக்காதவாறு அவர்களை எச்சரித்து, விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பகுதி, தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பிற்கு நியாயம் கிடைக்கப்பெற களத்தில் போராடிய மாணவர்களும், இளைஞர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையான முறையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வருகிற செய்தி வேதனையளிக்கிறது.

காவல்துறையினர் போராட்ட சமயத்தில் சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இச்சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.

எனவே, இருபுறமும் நடந்தேறியவற்றை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் கைது செய்த மாணவர்கள், இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் பாதிக்காதவாறு அவர்களை எச்சரித்து, விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News