உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-21 12:44 IST   |   Update On 2022-12-21 12:44:00 IST
  • ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.
  • 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் லட்சுமணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், கமலக்கண்ணன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலக சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன், மெல்கி ராஜா சிங், சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு ஓய்வூதியர்கள் மீதான நிலுவை ஒழுங்கு நடவடிக்கைகளின் மீது தாமதம் இல்லாமல் விசாரணை செய்து நிர்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடிக்க வேண்டும்.

ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும். ஓய்வூதியம் குறை தீர்வு கூட்டத்தினை மாநில, மாவட்ட அளவில் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தி நிலுவை இனங்கள் மீது தீர்வு காண வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம் நன்றி உரையாற்றினார்.

Similar News