உள்ளூர் செய்திகள்

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரத்தில் ரூ.2 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்

Published On 2022-07-01 10:35 GMT   |   Update On 2022-07-01 10:35 GMT
  • மாநகராட்சி பள்ளிகளில் ரூ.14.4 லட்சம் செலவில் மாணவர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • 10 பூங்காக்களில் ரூ.29.2 லட்சம் செலவில் குடிநீர், மின் விளக்கு, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைப்பது உள்ளிட்ட 53 பணிகளை ரூ.2 கோடி மதிப்பில் மேற்கொள்ளவும் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சென்னை:

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம், குரோம்பேட்டை பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள், ரூ.2 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டலத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில், கீழ்க்கட்டளை, ஈசாபல்லாவரம் பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ரூ.14.4 லட்சம் செலவில் மாணவர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி பல்லாவரம் மண்டலத்தில் தெருவிளக்கு, குடிநீர் பணிகள், வடிகால் சிறுபாலங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பாழடைந்து கிடக்கும் லட்சுமிநகர், சித்ரா டவுன் ஷிப் கச்சேரி மலை, சுபம் நகர் 1, 2, 3, காசி விசாலாட்சிபுரம் ஆகிய 10 பூங்காக்களில் ரூ.29.2 லட்சம் செலவில் குடிநீர், மின் விளக்கு, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைப்பது உள்ளிட்ட 53 பணிகளை ரூ.2 கோடி மதிப்பில் மேற்கொள்ளவும் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News