புழல் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 பேர் பலி
- தொழிலாளர்கள் பாஸ்கர், இஸ்மாயில் ஆகிய 2 பேரையும் பிணமாக மீட்டனர். அவர்கள் விஷ வாயு தாக்கியதில் இறந்து இருப்பது தெரிந்தது.
- புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்குன்றம்:
புழல் அடுத்த காவாங்கரை குருசாந்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நிர்மலா.இன்று காலை இவரது வீட்டில் உள்ள கழிவுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ. நகரை சேர்ந்த பாஸ்கரன் (வயது45), ஆட்டந்தாங்கல், பால கணேசன் நகரை சேர்ந்த இஸ்மாயில் (45) ஆகிய இருவரும் இன்று காலை வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கினர். இதில் விஷவாயு தாக்கியதில் இருவரும் மயங்கி விழுந்தனர்.
தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் புழல் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளர்கள் பாஸ்கர், இஸ்மாயில் ஆகிய 2 பேரையும் பிணமாக மீட்டனர். அவர்கள் விஷ வாயு தாக்கியதில் இறந்து இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.