உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து மாணவியை கற்பழிக்க முயன்ற போதகர் கைது

Published On 2022-07-04 12:45 IST   |   Update On 2022-07-04 12:45:00 IST
  • மாணவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மத போதகர் ஸ்டீபன் ராஜ் என்பவர் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.
  • பின்னர் அவர் மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார்.

கோவை:

கோவை மலுமச்சம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தாய், தந்தை ஆகியோர் பொம்மை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். எனவே மாணவி தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று மாணவியின் பாட்டி அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது மாணவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மத போதகர் ஸ்டீபன் ராஜ் (வயது 53) என்பவர் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

பின்னர் அவர் மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். உடனே போதகர் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

மாணவி நடந்த சம்பவத்தை தனது பாட்டி வந்ததும் கூறி கதறி அழுதார். பின்னர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மத போதகர் ஸ்டீபன்ராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் ஸ்டீபன்ராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News