உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே மின் கம்பி உரசியதில் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது
- தீ முழுவதும்பற்றி எரிந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.
- தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் வீடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பெருவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் வீட்டின் அருகே வைக்கோல்போர் வைத்துஇருந்தார். அதன் அருகியே மின்கம்பம் இருந்தது. இந்த நிலையில் மின்கம்பிகள் உரசியதில் தீப்பொறி பறந்து
வைக்கோல்போர் மீது விழுந்து தீப்படித்தது. தீ முழுவதும்பற்றி எரிந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். தகவல் அறிந்ததும் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்த வந்து தீயை அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் வீடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை.