உள்ளூர் செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்: திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சமையல் மாஸ்டர்

Published On 2023-05-20 11:55 IST   |   Update On 2023-05-20 11:55:00 IST
  • இளம்பெண் தனது காதலன் முருகேசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்தார்.
  • முருகேசன் கடந்த 1 மாதத்துக்கு முன்பு அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு காதலியை தவிக்க விட்டு மாயமானார்.

கோவை:

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண்.

இவருக்கு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு கோவை சூலூரை சேர்ந்த சமையல் மாஸ்டர் முருகேசன் (வயது 35) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் மூலமாக பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் காதலர்கள் 2 பேரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நேரில் சந்தித்தனர். அப்போது 2 பேருக்கும் பிடித்து போனதால், திருமணம் செய்து கொள்வதற்கு அவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து முருகேசன் சூலூரில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்ணுடன் தங்கினார்.

அப்போது அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் அவர் 5 மாத கர்ப்பமானார். அவர் தனது காதலன் முருகேசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்தார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்த நிலையில் முருகேசன் கடந்த 1 மாதத்துக்கு முன்பு அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு காதலியை தவிக்க விட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சியான இளம்பெண் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது பேசிய முருகேசன் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறியதுடன், அந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பினார். இதனை பார்த்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான முருகேசனை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News