உள்ளூர் செய்திகள்

பிரதமருக்கு எதிராக புகார்- பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

Published On 2022-09-07 10:29 GMT   |   Update On 2022-09-07 10:29 GMT
  • நந்தினி மற்றும் அவரது சகோதரியை ஊருக்கு செல்லுமாறு மதுரைக்கு செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டனர். இதனால் சற்று பரபரப்பு குறைந்தது.
  • மீண்டும் திண்டுக்கல் வந்த நந்தினி மற்றும் அவரது சகோதரி திண்டுக்கல்லில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்து சென்றனர்.

திண்டுக்கல்:

மதுரையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. இவர் தனது தங்கை நிரஞ்சனியுடன் திண்டுக்கல் பஸ்நிலையத்திற்கு வந்தார். பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்து வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனையடுத்து நகர்வடக்கு போலீசார் அங்கு விரைந்து வந்து பா.ஜ.கவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நந்தினி மற்றும் அவரது சகோதரியை ஊருக்கு செல்லுமாறு மதுரைக்கு செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டனர். இதனால் சற்று பரபரப்பு குறைந்தது. ஆனால் மீண்டும் திண்டுக்கல் வந்த நந்தினி மற்றும் அவரது சகோதரி திண்டுக்கல்லில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்து சென்றனர்.

இதனால் பா.ஜ.க நிர்வாகிகள் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். நந்தினி மற்றும் அவரது சகோதரிக்கு ஆதரவாக காங்கிரசார் திரண்டதால் பதட்டம் உருவானது. இதனைதொடர்ந்து சகோதரிகள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். சமூகஅமைதியை கெடுக்கும் வகையில் செயல்பட்ட அவர்களை கைது செய்யக்கோரி பா.ஜ.கவினர் புகார் அளித்தனர்.

ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News