உள்ளூர் செய்திகள்
குன்றத்தூரில் தொழிலாளி அடித்துக்கொலை
- ஏரிக்கரை செல்லும் சாலையில் காளிதாசன் வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்தார்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
விழுப்புரத்தை சேர்ந்தவர் காளிதாசன்(வயது40). இவர் பல்லாவரத்தில தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை குன்றத்தூர் அடுத்த ஜெயம் நகர் ஏரிக்கரை செல்லும் சாலையில் காளிதாசன் வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது தலையில் கல்லால் தாக்கியதற்கான பலத்த காயமும், முகத்தில் காயங்களும் இருந்தது.
எனவே மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு உடலை இங்கு கொண்டு வந்து போட்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பல்லாவரத்தில் இருந்து காளிதாசன் எதற்காக இங்கு வந்தார்? கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.