உள்ளூர் செய்திகள்
கல்பாக்கம் புதிய பாவினி அணுமின் நிலையத்திற்கு இயக்குனர் நியமனம்
- புதிய அணுமின் நிலையம் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து பாவினி என்ற பெயரில் கட்டப்பட்டு வந்தது.
- மின் உற்பத்தி செய்ய அணுசக்தி துறையின் அனுமதிக்காக தயாராக உள்ளது.
கல்பாக்கத்தில் 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய அணுமின் நிலையம் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து "பாவினி" என்ற பெயரில் கட்டப்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடிந்து மின் உற்பத்தி செய்ய அணுசக்தி துறையின் அனுமதிக்காக தயாராக உள்ளது.
இந்தநிலையில் "பாவினி" புதிய அணுமின் நிலையத்திற்கு தலைவர் மற்றும் இயக்குனராக, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின், அதிவேக அணு உலை ஆராய்ச்சியாளராக இருந்த கே.வி.சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது பொறுப் பேற்றுள்ளார்.