உள்ளூர் செய்திகள்

எழும்பூர்-தஞ்சாவூர் இடையே இன்டர்சிட்டி ரெயில் சேவை: இரா.கிரிராஜன் எம்.பி. கோரிக்கை

Published On 2023-04-23 16:25 IST   |   Update On 2023-04-23 16:25:00 IST
  • சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் இடையே இன்டர்சிட்டி ரெயில் சேவையை தொடங்க பரிசீலிக்க வேண்டும்.
  • தஞ்சாவூர் ஒரு கோவில் நகரம் என்பதால் மாணவர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்கின்ற நிலை உள்ளது.

சென்னை:

வடசென்னை எம்.பி. இரா.கிரிராஜன் மத்திய ரெயில்வே மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் இடையே இன்டர்சிட்டி ரெயில் சேவையை தொடங்க பரிசீலிக்க வேண்டும். தஞ்சாவூர் ஒரு கோவில் நகரம் என்பதால் மாணவர்கள், தொழில் வல்லுனர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்கின்ற நிலை உள்ளது. பஸ், உள்ளூர் ரெயில் போக்குவரத்து பெரும்பாலும் நெரிசலாக உள்ளது. இது மக்களுக்கு வசதியான போக்குவரத்து முறையை வழங்குவதோடு மட்டுமின்றி சாலைகளில் நெரிசலை குறைக்க உதவும். இதன் மூலம் இரு நகரங்களுக்கு இடையே இணைப்பை மேம்படுத்துதல், பிராந்திய பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தல் உள்ளிட்ட நன்மைகள் ஏற்படும். எனவே எழும்பூர்-தஞ்சாவூர் இடையே இன்டர்சிட்டி ரெயில் சேவையை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News