உள்ளூர் செய்திகள்
மின் கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்தது
- மின்கசிவு காரணமாக கமலம்மாளின் வீடு தீடீரென தீப்பற்றி எரிந்தது.
- பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த சிறுவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கமலம்மாள். இவர் பூட்டிவிட்டு அருகில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது மின்கசிவு காரணமாக கமலம்மாளின் வீடு தீடீரென தீப்பற்றி எரிந்தது.
அருகில் உள்ளவர்கள் வீட்டில் பற்றிய தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.