திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை: ஆவடி, பெரம்பூரில் 17 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது
- சோழிங்கநல்லூர் எம்.ஜி.ஆர். நகர், அம்பத்தூர், அயனாவரம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் 13 செ.மீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்து உள்ளது.
- அண்ணாபல்கலைக்கழகம் பகுதியில் 12 செ.மீட்டர், டி.ஜி.பி. அலுவலக பகுதியில் 11 செ.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
திருவள்ளூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழைபெய்து வருகிறது.
இதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் கொட்டி வரும் மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 17 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்து உள்ளது. இதனால் ஆவடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளன. தாழ்வான இடங்களில் வீடுகளை சூழ்ந்த மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
இதே போல் சென்னை மாநகராட்சி அலுவலக பகுதி, பெரம்பூர் ஆகிய இடங்களிலும் 17 செ.மீட்டர் மழை பெய்து உள்ளது.
சோழிங்கநல்லூர் எம்.ஜி.ஆர். நகர், அம்பத்தூர், அயனாவரம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் 13 செ.மீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்து உள்ளது.
அண்ணாபல்கலைக்கழகம் பகுதியில் 12 செ.மீட்டர், டி.ஜி.பி. அலுவலக பகுதியில் 11 செ.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரியில் 16 செ.மீட்டர், செங்குன்றத்தில் 14.2 செ.மீட்டர், கும்மிடிப்பூண்டியில் 13.6 செ.மீட்டர் மழை அதிகபட்சமாக பதிவாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
பள்ளிப்பட்டு-12
ஆர்.கே.பேட்டை-23
சோழவரம்-78
ஜமீன்கொரட்டூர்-76
பூந்தமல்லி-55
திருவாலங்காடு-48
திருத்தணி-24
பூண்டி-55
தாமரைப்பாக்கம்-88
திருவள்ளூர்-72
ஊத்துக்கோட்டை-18