உள்ளூர் செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது
- பஸ்சில் ஆந்திர மாநிலம் உதயகிரியில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 4 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது.
- கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று சப்-இன்ஸபெக்டர் ஜெபதாஸ் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த பஸ்சில் ஆந்திர மாநிலம் உதயகிரியில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 4 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது.
இது குறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற மதுரையைச் சேர்ந்த பிரபு (20) அஜய் பிரபாகர் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.