உள்ளூர் செய்திகள்

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ரூ. 7 லட்சத்துடன் வந்த விவசாயி சுகில்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ரூ.7 லட்சத்துடன் வந்த விவசாயி

Published On 2022-10-10 15:18 IST   |   Update On 2022-10-10 15:18:00 IST
  • எனது விவசாய பணிகளுக்காக கடந்த 2005-ம் ஆண்டு ஒரு டிராக்டர் வாங்கினேன்.
  • தோட்டத்தின் பத்திரங்களை அடமானம் வைத்து திசையன்விளையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடனுதவி பெற்றேன்.

நெல்லை:

குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் சுகில் (வயது45).

இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் 19½ ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் தோட்டம் அமைத்து காய்கறிகள் பயிரிட்டு வருகிறார். மேலும் அந்த காய்கறிகளை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் சுகில் ரூ.7லட்சம் பணத்துடன் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீருடன் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது விவசாய பணிகளுக்காக கடந்த 2005-ம் ஆண்டு ஒரு டிராக்டர் வாங்கினேன். இதற்காக எனது தோட்டத்தின் பத்திரங்களை அடமானம் வைத்து திசையன்விளையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடனுதவி பெற்றேன்.

அதன்படி ரூ. 80 ஆயிரம் வரை தவணை தொகை கட்டிய நிலையில் பின்னர் செலுத்தவில்லை.

இதைததொடர்ந்து வங்கியின் சார்பில் தோட்டத்தை ஏலம் விடுவதாக அறிவிப்பு வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ. 7 லட்சத்துடன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றேன். ஆனால் காலக்கெடு முடிந்துவிட்டதால் மண்டல அலுவலத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறினர்.

அங்கு நான் சென்ற போது வங்கியின் கிளைக்கு செல்லுமாறு கூறினர். இப்படி என்னை அலைக்கழித்த நிலையில் எனது தோட்டம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

தற்போது வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ. 7 லட்சம் பணம் கொண்டு வந்துள்ளேன். எனக்கு வாழ்வாதாரமாக விளங்கும் எனது தோட்டத்தை மீட்டு என்னிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News