உள்ளூர் செய்திகள்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் தர்ணா போராட்டம்

Published On 2022-08-05 14:39 IST   |   Update On 2022-08-05 14:39:00 IST
  • தமிழக அளவிலான 180 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் பணியாளர்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.

கூட்டுறவு சங்க பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை துவங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியமாக ரூ. 10,000 வழங்க வேண்டும்.

பணியில் உள்ளவர்களுக்கு மாற்று ஒய்வுதியம், கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளர்கள் பல கட்ட போராட்டங்களை தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் ஜி.வைரப்பன் தலைமையில் நடத்தி வருகிறார்கள்.

அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தர்ணா போராட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் இ.அருணாசலம், மாநில கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் எஸ்.ஜினச்சந்திரன், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு மாவட்ட கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் எம்.யுவராஜ், மாவட்ட பொருளாளர் ஜி.மதியழகன் மற்றும் 25 கூட்டுறவு வங்கி பணியாளர்கள், தமிழக அளவிலான 180 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் பணியாளர்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.

Similar News