உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் முதல் முகையூர் வரை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்துக்கு கட்டிடங்கள் இடிப்பு

Published On 2022-11-30 12:50 IST   |   Update On 2022-11-30 12:50:00 IST
  • தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 4 வழி சாலையாக மாற உள்ளது.
  • கட்டிடங்களை இடிக்க அதன் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் முதல் முகையூர் வரை 31 கி.மீ., தூரத்துக்கு கிழக்கு கடற்கரை சாலை ரூ. 700கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 4 வழி சாலையாக மாற உள்ளது.

இதில் 38சிறிய பாலங்கள் அமைய உள்ளது. இதற்காக 5,434 பேரின் பட்டா நிலங்களை அரசு கையகப்படுத்தி உள்ளது. இந்தநிலையில் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிப்பதற்காக சாலையோர கடை, வீடு, கோவில், மண்டபம் என அனைத்து கட்டிடங்களையும் பொக்லைன் எந்திரம் மூலம்இடிக்கும் பணி நடந்து வருகிறது.

இதில் கட்டிட உரிமையாளர்கள் சிலருக்கு இன்னும் உரிய இழப்பீடு பணம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சில பகுதிகளில் கட்டிடங்களை இடிக்க அதன் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில இடங்களில் கட்டிடங்களை இடிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

Similar News