உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம்-கோவளம் கடற்கரையை தூய்மையாக வைக்க பயிலரங்கம்: கலெக்டர் பங்கேற்பு
- தூய்மை சமூகம், தூய்மை கடல் என்ற பெயரில் மாமல்லபுரத்தில் பயிலரங்கம் நடைபெற்றது.
- மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் மற்றும் "நீலக்கொடி" அந்தஸ்த்தை பெற்ற கோவளம் கடற் கரையை தூய்மையாக வைப்பது தொடர்பாக "தூய்மை சமூகம், தூய்மை கடல்" என்ற பெயரில் மாமல்லபுரத்தில் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாளை வரை இந்த பயிலரங்கம் நடை பெறுகிறது.