உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறையில் ஆதி திராவிடர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

விடுதியில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்காத சமையலர்கள்- காப்பாளர் பணியிடமாற்றம்

Published On 2023-03-07 06:14 GMT   |   Update On 2023-03-07 06:14 GMT
  • சரிவர தரமான உணவுகள் வழங்கப்படவில்லை என்றும், சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் கலெக்டரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.
  • கலெக்டர்உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு சரிவர தரமான உணவு வழங்கப்படாததும், விடுதியை சரிவர பராமரிப்பு இல்லாததும் தெரியவந்தது.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் ஆதி திராவிடர் அரசு கல்லூரி மாணவர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி ஆதிதிராவிடர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சரிவர தரமான உணவுகள் வழங்கப்படவில்லை என்றும், சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் கலெக்டரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து கலெக்டர்உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு சரிவர தரமான உணவு வழங்கப்படாததும், விடுதியை சரிவர பராமரிப்பு இல்லாததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கலெக்டர் மகாபாரதி ஆதி திராவிடர் அரசு கல்லூரி விடுதி காப்பாளர் மோகன் மற்றும் சமையலர்கள் சித்தார்த்தன், ஜெயபிரகாஷ் ஆகியோரை பணி இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவிட்டார்.

உடனடியாக மாணவர்களுக்கு தரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் விடுதியின் வளாகத்தை சுத்தம் செய்ய நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News