உள்ளூர் செய்திகள்

நன்மங்கலம் ஏரியில் வாலிபர் பிணம்

Published On 2022-08-03 14:44 IST   |   Update On 2022-08-03 14:44:00 IST
  • குடும்பத் தகராறில் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.
  • பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பம்மல், காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது35). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ந்தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் இன்று காலை நன்மங்கலம் ஏரியில் செல்வம் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிள் ஏரிக் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தது. அவர் குடும்பத் தகராறில் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News