வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அணைக்கட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர்:
அ.தி.மு.க., சார்பில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலை வாசி உயர்வு உள்ளிட்ட தி.மு.க., அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதீஷ்குமார், சிகே.சிவாஜி, தாஸ், பி.எஸ் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அணைக்கட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி தலைவர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் பாபுஜி, ஆனந்தன், நகர செயலாளர்கள் கோவிந்தன், ஜோதி குமார், உமாபதி உட்பட ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே நகர செயலாளர் டி.டி. குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் டாக்டர் திருப்பதி, துணை செயலாளர்கள் லீலா சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் ஆரணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் தூசி. மோகன் முக்கூர் சுப்பிரமணியன், மாநில செய்தி தொடர்பாளர் பாபுமுருகவேல், முன்னாள் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், நகர மன்ற துணைத் தலைவர் பாரி.பாபு, நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கர், கோவிந்தராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை நகர செயலாளர் சந்தோஷம் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சம்பத், சந்திரசேகர், விகேஆர்.சீனிவாசன் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார் ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பெல் கார்த்திகேயன், வாலாஜா நகர செயலாளர் மோகன் மற்றும் முன்னாள் நகரமன்ற தலைவர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.