உள்ளூர் செய்திகள்

தாம்பரம் அருகே லாரி மோதி 4 மாடு பலி

Published On 2022-12-31 14:16 IST   |   Update On 2022-12-31 14:16:00 IST
  • பொது மக்கள் லாரி டிரைவரை மடக்கி பிடித்து கடுமையாக தாக்கினர்.
  • விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாம்பரம்:

தாம்பரத்தை, அடுத்த முடிச்சூர் சாலை பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் அருகே சாலையில் சுற்றித்திரிந்த 5 மாடுகளின் மீது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 மாடுகள் பலியானது. ஒரு மாடு உயிருக்கு போராடி வருகிறது.

இதை பார்த்த பொது மக்கள் லாரி டிரைவரை மடக்கி பிடித்து கடுமையாக தாக்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீர்கன் காரனை போலீசார் டிரைவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் லாரியை ஓட்டியது மணிகண்டன் என்பவர் என்பது தெரியவந்தது. விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News