ராயக்கோட்டை அருகே 13 ஆடுகளின் கழுத்தை அறுத்து கொன்ற மர்மநபர்கள்: போலீசார் விசாரணை
- இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 13 ஆடுகளின் கழுத்தை அறுத்துவிட்டு 7 ஆடுகளை எடுத்து சென்றுள்ளனர்.
- சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஆலப்பட்டி கிராமத்தில் சின்னக்கண்ணு. இவருக்கு சொந்தமான 13 ஆடுகள் உள்ளது. இவர் நேற்று மாலை தனது விவசாய நிலத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 13 ஆடுகளின் கழுத்தை அறுத்துவிட்டு 7 ஆடுகளை எடுத்து சென்றுள்ளனர். மேலும் 2 இருசக்கர வாகனங்கள் அங்கே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து சின்னக்கண்ணு கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்ததில், மர்மநபர்கள் வந்த 2 இருசக்கர வாகனங்களும் திருட்டு வண்டி என்றும், வந்தவர்கள் குற்றவாளிகள் என்றும், மேலும் அவர்கள் இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு ஆடுகளுடன் காரில் தப்பி ஓடியது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.