உள்ளூர் செய்திகள்

சிவகாசி யூனியனுக்குட்பட்ட 25-வது வார்டு சிவகாமிபுரம் தொடக்கப்பள்ளியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பெண்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 11 உள்ளாட்சி பதவிகளுக்கு விறுவிறு வாக்குப்பதிவு

Published On 2022-07-09 06:34 GMT   |   Update On 2022-07-09 06:34 GMT
  • சிவகாசி யூனியனில் காலியாக இருந்த 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இன்று தேர்தல் நடந்தது.
  • சிவகாசி யூனியனில் தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகர, கிராம உள்ளாட்சி அமைப்புகளில் 25 பதவிகள் காலியாக இருந்தன. இதற்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி வேட்பு மனு பெறப்பட்டது.

இதில் 14 கிராம ஊராட்சி வார்டு பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 11 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மேற்கண்ட 11 இடங்களுக்கு 38 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

இன்று மேற்கண்ட பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 28 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். சில இடங்களில் மந்த நிலை காணப்பட்டது.

28 வாக்குச்சாவடிகளில் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்ட 9 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சி.சி.டி.வி. கேமிரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் 7 ஆயிரத்து 202 ஆண்களும், 7 ஆயிரத்து 664 பெண்களும், இதரர் 1 என மொத்தம் 14 ஆயிரத்து 867 பேர் வாக்களிக்கின்றனர்.

சிவகாசி யூனியனில் காலியாக இருந்த 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இன்று தேர்தல் நடந்தது. சிவகாசி யூனியனில் தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

2795 ஆண்களும், 2990 பெண்கள் என மொத்தம் 5785 வாக்காளர்கள் ஓட்டுபோடுகின்றனர். இன்று அதிகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் 9 வாக்குசசாவடிகளில் பணியமர்த்தப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

Tags:    

Similar News