உள்ளூர் செய்திகள்
பணிகளை திட்ட இயக்குனர் மோனிகா ராணா ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
சிறுமலையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட பணிகள் ஆய்வு
- திண்டுக்கல் அருகே சிறுமலையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
- துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சிறுமலையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் பணிகளை திட்ட இயக்குனர் மோனிகா ராணா, பொறியாளர் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதில் தென்மலையில் இருந்து பொன்னுருக்கி செல்லும் சாலை, கருப்பு கோவில் செல்லும் சாலை, பசலிக்காடு செல்லும் சாலை, தாழக்கடை செல்லும் சாலை ஆகிய 4 சாலைகளின் 2022-23ஆம் ஆண்டிற்கான புதிய முன்மொழிவுக்கான பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் மாவட்ட திட்ட அலுவலர் கிரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெள்ளிமலை, மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி, வி.ஏ.ஓ. வசந்த், ஊராட்சி செயலர் முத்துக்குமார் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.