வீட்டை விட்டு வெளியேறிய மாற்றுத்திறன் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு
- 15 வயது மகன் இன்று காலை 6 மணியளவில் திடீரென வீட்டை விட்டு வெளியேறினான்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி வடக்குக்காட்டில் உள்ள நகைக்கடை உரிமையாளர் சிவந்தீஸ்வரன் வீட்டில் தஞ்சம் அடைந்தான்.
வாழப்பாடி:
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதிடர் அம்சகுமார் - விஜயலட்சுமி தம்பதியினரின் 15 வயது மகன் இன்று காலை 6 மணியளவில் திடீரென வீட்டை விட்டு வெளியேறினான்.
மாற்றுத்திறனாளியான இவன் மீண்டும் வீடு திரும்ப வழி தெரியாததால், சேலம் மாவட்டம் வாழப்பாடி வடக்குக்காட்டில் உள்ள நகைக்கடை உரிமையாளர் சிவந்தீஸ்வரன் வீட்டில் தஞ்சம் அடைந்தான்.
சிறுவனிடம் அன்புகாட்டி உபசரித்த சிவந்தீஸ்வரன் குடும்பத்தினர், சிறுவனின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் பல்வேறு குழுக்களில் பகிர்ந்தனர். மேலும் சிறுவனை வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் மகனை தேடி அலைந்த பெற்றோர், வாட்ஸ் அப் வாயிலாக தகவலறிந்து, வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். இதையடுத்து சிறுவன் போலீசார் மூலமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, மீட்டுக் கொடுத்த நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தினர், போலீசா ருக்கு சச்சினின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.