உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

நாங்கூரில், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்

Published On 2023-07-22 15:12 IST   |   Update On 2023-07-22 15:12:00 IST
  • விவசாயிகளுக்கு மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டது.
  • பொம்மலாட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் வேளாண்மை துறை சார்பில் குருவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் முன்னிலை வைத்தார் துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் இடுபொருள்கள் தென்னங்கன்றுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து பொம்மலாட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

விழாவில் உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜய அமிர்தராஜ், தமிழரசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்கவி, ராமன், வேதை ராஜன், அலெக்சாண்டர், தொழில் நுட்ப வல்லுனர்கள் ராஜசேகர், சவுந்தரராஜன், பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் விஜய் சாரதி, கோபி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் ஊராட்சித் தலைவர் சுகந்தி நடராஜன் ஒப்பந்தக்காரர் பழனிவேல் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News