உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான துணைத் தேர்வு 7 மையங்களில் தொடங்கியது: கண்காணிப்பு பணி தீவிரம்

Published On 2023-06-19 06:58 GMT   |   Update On 2023-06-19 06:58 GMT
  • வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலகத்திலிருந்து 3 மையங்களுக்கு வினாத் தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
  • காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிகிறது.

கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி மாவட்ட தில் பிளஸ்-2 மாண வர்களுக்கான துணைத் தேர்வு இன்று தொடங்கியது. இத்தேர்வுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெறுகிறது. கள்ளக் குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலகத்திலிருந்து 3 மையங்களுக்கும், திருக்கோ விலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 2 மையங்களுக்கும், உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 2 மையங்களுக்கும் வினாத் தாள்கள் அனுப்பி வைக்கப் பட்டன. இத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிகிறது.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயின்று ஒரு சில பாடப்பிரிவுகளில் தோல்வியடைந்த மாண வர்கள் தேர்வெழுது கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான அதிகாரி கள் தேர்வு மையங்களுக்கு நேரடியா சென்று கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்ட னர். தேர்வெழுதும் மாண வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News