உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

சத்துணவு அமைப்பாளர்களுக்கு மேற்பார்வையாளர் பயிற்சி

Published On 2023-07-28 14:55 IST   |   Update On 2023-07-28 14:55:00 IST

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் சாந்தி ஆலோசனைப்படி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைப்போடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக 50 பேருக்கு ஒன்றியத்துக்கு 10 பேர் வீதம் தேர்வு செய்து தருமபுரி கடைவீதி வர்த்தகர் மஹாலில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்றது.

    உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால் மற்றும் குமணன் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பார்ட்னர் சக்சம் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் தாரணி பயிற்சி வழங்கினார்.

    மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் வழங்கும் உணவுகள் சுகாதாரமான முறையில் தயாரித்து தரமானதாக வழங்க வேண்டும்.

    இந்த மேற்பார்வையாளர் பயிற்சி மேம்படுத்தும் எனவும் பயிற்சியில் வழங்கப்படும் கருத்துக்களை நன்றாக உள்வாங்கி தங்கள் பள்ளி சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு எடுத்துரைத்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியதுடன் உணவு தயாரிக்கும் உணவு பாக்கெட் மூலப்பொருள்களில் லேபிள்களை கண்காணித்து முடிவு தேதிக்கு முன்பாக உபயோகம் மேற்கொள்ள வேண்டும் எனவும், எலி, கரப்பான், பல்லி மற்றும் பூச்சிகள் அண்டாமல் கண்காணித்து உணவு மையத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என கூறினார்.

    தருமபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் கூறுகையில் அனைத்து சத்துணவு மையங்களும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் முறையாக புதுப்பித்து மையங்களில் மாட்டி வைத்திருக்க வேண்டும்.

    முடிவில் சத்துணவு அமைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

    Tags:    

    Similar News