உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாமை கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்ட ரைபிள் கிளப் சார்பில் கோடை கால துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம்

Published On 2023-05-15 13:19 IST   |   Update On 2023-05-15 13:19:00 IST
  • பயிற்சியினை சிறப்பாக மேற்கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீரர்களாக மாணவ-மாணவிகள் திகழ வேண்டும்.
  • பயிற்சி மூலம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு சிறப்பாக அமையும்.

தென்காசி:

தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பின் சார்பில் மேலமெஞ்ஞானபுரத்தில் இயங்கி வரும் ரைபிள் கிளப்பில் கோடை கால துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டர் பேசுகையில், கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக ஆக்கிட மாணவ-மாணவிகள் இப்பயிற்சியினை சிறப்பாக மேற்கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீரர்களாக திகழ வேண்டும் என்றார்.

பின்னர் மாணவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியினை பார்வையிட்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார். பயிற்சியாளர் கூறுகையில், இந்த துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது துப்பாக்கி கையாளுதல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு விதிகள், வார்ம் அப், யோகா, மெடிடேஷன் ஆகியவை அளிக்கப்படு கின்றன. துப்பாக்கி சுடும் பயிற்சி மூலம் மாணவர்களுக்கு உடல்நலம், மன ஒருமைப்பாடு, சிந்தனை திறன் மேம்பாடு, தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, விடாமுயற்சி, பார்வை திறன் மற்றும் படிப்பில் மனது ஒருமைப்பாடு ஆகியவை சிறப்பாக அமையும் என கூறினார்.

நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் சக்தி மணிகண்டன், கார்த்திகேயன், டேலிஸ் மைதீன், பிச்சையா, சசி, செந்தமிழ்ச்செல்வன் மற்றும் கிளப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிளப்பின் செயலாளர் ரஷீத் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News